தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் தான் நடிகை கேத்ரின் தெரசா.இவர் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அந்தத் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறியா என்ற ஒரு டயலாக் மூலமாக ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் பக்கம் கட்டி போட்டவர் இவர்தான்.

இந்த திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் கணிதன்,கலகலப்பு 2 மற்றும் அருவம் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இருந்தாலும் மெட்ராஸ் திரைப்படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதன் பிறகு படங்களில் திடீரென கவர்ச்சி கன்னியாக வலம் வரத் தொடங்கினார்.

இதனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் படங்களில் கவர்ச்சியாக தான் நடித்துள்ளார். இருந்தாலும் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கில் தான் தற்போது அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவ்வாறு அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அதேசமயம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் ரசிகர்களுடன் உரையாடினார்.அப்போது பல கேள்விகளுக்கு பதில் அளித்த நிலையில் ஒரு நபர் ஹாட் போட்டோ வேண்டுமென இவரிடம் கேட்க உடனே கேத்ரின் ஒரு போட்டோவை அனுப்பினார்.அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
