தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பை மேற்கொள்ள முடியாத மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கல்லூரி படிப்பை மேற்கொள்ள முடியாத மாணவர்களுக்காக பெற்றோர் மாணவர் கூட்டம் நடத்தப்பட்டுஅதில் பலரும் பங்கேற்ற நிலையில் அவர்களில் உயர் கல்வி தொடர முடியாத மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் பிற துறையினருடன் இணைந்து உயர்கல்வி தொடர ஏதுவாக முகாம் நடைபெற்ற ஏராளமான மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் அது உதவியாக இருந்தது.

எனவே தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்வி தொடர முடியாத மாணவர்கள் பலனடையும் வகையில் இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பை தொடர தமிழக அரசு மேற்கொண்டு உள்ள நடவடிக்கையில் பிரபல நடிகர் கலையரசன் தற்போது இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசி உள்ள வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரசுப் பள்ளியில் 12 வகுப்பு முடித்து கல்லூரி செல்லா மாணவர்களைக் கண்டறியும் தமிழ்நாடு அரசின் முயற்சியில் இணையும் திரைக்கலைஞர் கலையரசன் @kalaiactor
.@Anbil_Mahesh
.#School | #Students | #Education | #GovtSchools | #TNSED | #TNGovtSchools | #OOSC #TNschools | #பள்ளிக்கல்வித்துறை pic.twitter.com/k3f56W7k2w— தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை (@tnschoolsedu) October 22, 2022