தமிழ் திரை உலகில் இன்று சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகர்களுக்கு ரசிகர்கள் அதிகம் என்று கூறலாம்.அப்படி மாடலாக தனது மீடியா பயணத்தை தொடங்கி தற்போது சின்னத்திரை மற்றும் டிஜிட்டல் நடிகையாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை சம்யுத்தா.

மாடலாக ஆரம்பித்து போட்டோ சூட் எடுத்த அதன் மூலம் பிரபலமான இவர் அடுத்தடுத்து youtube இல் நடிகையாக அறிமுகமானார். அவ்வாறு நடித்து நடிகையாக அடையாளம் பெற்று பெரிய வரவேற்பை பெற்ற இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன்,அன்புடன் குஷி மற்றும் சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சீரியல் நடிகையாக மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வது வழக்கம். தற்போது இவர் சிப்பிக்குள் முத்து தொடரில் நடித்து வந்த பிரபல சீரியல் நடிகர் விஷ்ணுகாந்தை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இதனை தொடர்ந்து இந்த தம்பதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.