அடடே சூப்பர்…. பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்துவிற்கு பதிலாக என்ட்ரி கொடுக்கும் பிரபல தமிழ் நடிகர்…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். அதில் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கிய நிலையில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு புதிய போட்டியாளராக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக போட்டியாளர்களைக் கவர்ந்த ஒருவர்தான் ஜி பி முத்து.

இந்த சீசனில் 100 நாட்கள் இருந்து கட்டாயம் இவர்தான் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் திடீரென பிக் பாஸ் வீட்டை விட்டு ஜி.பி முத்து வெளியேறினார்.கடந்த சில நாட்களாக குடும்பத்தினர் நினைவில் இருந்து வந்த ஜி பி முத்து நான் வீட்டிற்கு போக வேண்டும் என கூறி வந்தார்.

இதனால் அவரை அழைத்து பிக் பாஸ் எத்தனையோ முறை சமாதானம் பேசிய நிலையிலும் ஜிபி முத்து சமாதானம் ஆகவில்லை. அதுமட்டுமல்லாமல் கமல் பேசிய போது கூட எனக்கு புகழ் பணத்தைவிட என் பிள்ளை தான் முக்கியம் எனக் கூறிவிட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு ஜிபி முத்து வெளியேறிவிட்டார். தனது பிள்ளைகள் குறித்து ஜிபி முத்து பேசியதை கண்டு போட்டியாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.

ஜி பி முத்துவின் இந்த முடிவுக்கு அவருடைய ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் ஜி.பி முத்துவிற்கு பதிலாக பிரபல நடிகர் மன்சூர் அலிகான் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் ரசிகர்களும் சற்று உற்சாகமடைந்துள்ளனர். இந்த வாரம் இறுதிக்குள் மன்சூர் அலிகான் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.