தல தீபாவளியை கொண்டாடிய ரவீந்தர் – மகாலட்சுமி ஜோடி…. வேற லுக்கில் இணையத்தை கலக்கும் புகைப்படம்….!!!!

பிரபல சீரியல் நடிகை யான மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் இவர்களின் திருமணம் குறித்த விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது.

திருமணம் முடிந்த இத்தனை நாட்கள் ஆகியும் அவர்கள் குறித்த விமர்சனங்கள் என்னும் ஓயவில்லை. இருந்தாலும் இதற்கெல்லாம் கவலைப்படாமல் ஒவ்வொருவரின் விமர்சனத்திற்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் ரவீந்தர்.அதனைப் போலவே தவறாக விமர்சிக்கும் பலருக்கும் மகாலட்சுமி பொறுமையாக தங்களின் திருமணம் குறித்த பதில்களையும் அவர் கூறி வருகிறார்.

 

அது மட்டும் அல்லாமல் இவர்கள் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் மற்றும் அவுட்டிங் செல்வது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்போது விமர்சனங்களை எல்லாம் பெரிதளவில் எடுத்துக் கொள்ளாமல் தற்போது மகாலட்சுமி ரவிந்தர் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர்.சீரியலில் கவனம் செலுத்தி வரும் மகாலட்சுமி ரவிந்தரை பிக் பாஸ் விமர்சனம் செய்யக்கூடாது எனச் சொல்லியும் அவர் செய்துள்ளார்.

 

இந்நிலையில் ரவீந்தர் மகாலட்சுமி தம்பதியினர் தல தீபாவளியை கொண்டாடிய நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.