விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். அதில் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கிய நிலையில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு புதிய போட்டியாளராக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக போட்டியாளர்களைக் கவர்ந்த ஒருவர்தான் ஜி பி முத்து. இந்த சீசனில் நூறு நாட்கள் இருந்து கட்டாயம் இவர்தான் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் திடீரென பிக் பாஸ் வீட்டை விட்டு ஜி.பி முத்து வெளியேறினார்.

இதனிடையே தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடன இயக்குனரான ராபர்ட், வனிதாவின் முன்னாள் கணவர்.ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா பங்கேற்று இருந்த நிலையில் தற்போது மனிதாவின் முன்னாள் கணவர் ராபர்ட் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பங்கேற்றுள்ளார். ராபர்ட் மாஸ்டர் கலந்த வாரம் தனது கதையை சொன்னபோது தான் இளம் வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டது, 18 வயதில் ஓடிப் போய் காதல் திருமணம் உள்ளிட்ட பல விஷயங்களை கூறினார்.

அதேசமயம் தனது முதல் மனைவி குழந்தை பிறந்ததும் தன்னை விட்டுச் சென்றதாக கூறியவர் தனது சொந்த மகளுக்கு கூட நான் தான் அப்பா என தெரியாது என கண்ணீருடன் கூறினார். என்னுடைய மகளை நான் சில முறை மட்டுமே பார்த்துள்ளேன். அவர் என்னை அங்கிள் என்று தான் அழைத்தார் என கண்கலங்க ராபர்ட் மாஸ்டர் கூறினார்.இந்நிலையில் தற்போது ராபர்ட் மாஸ்டர் இன்ஸ்டாகிராமில் அவரின் மகள் புகைப்படத்தை முன்பே வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
