தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் லத்தி திரைப்படம் பெரிய அளவில் உருவாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது அந்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே விஷால் பிரபல நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. நடிகர் விஷால் நடிகை அபிநயாவை காதலித்து வருகின்றார். அபிநயா நாடோடிகள்,ஆயிரத்தில் ஒருவன் மற்றும் குற்றம் 23 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

அது மட்டுமல்லாமல் விஷால் நடிப்பில் வெளிவந்த பூஜை திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்து இருந்தார் அபிநயா. தற்போது இவ்வாறு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் விஷால் மற்றும் அபிநயா இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இருந்தாலும் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. அதேசமயம் நடிகை அபிநயா வாய் பேச இயலாதவர் எனவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
