தல தீபாவளி கொண்டாடிய நட்சத்திர ஜோடிகள்…. இணையத்தை கலக்கும் வேற லெவல் வீடியோ….!!!!

தமிழர்களின் பாரம்பரியமான பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி. இந்த வருடம் தீபாவளி அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்பட்டது. புதிதாக திருமணமான ஜோடிகளுக்கு இந்த தீபாவளி ரொம்ப ஸ்பெஷல் தான். ஏனென்றால் அவர்களுக்கு இது தல தீபாவளி.அப்படி இந்த வருடம் தல தீபாவளி கொண்டாடிய சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்கள் இருவரும் தற்போது இரட்டை குழந்தையுடன் தல தீபாவளியை மிகுந்த மகிழ்ச்சியாக கொண்டாடினர். அடுத்ததாக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தம்பதிக்கு செப்டம்பர் மாதம் திருமணம் முடிந்த நிலையில் தல தீபாவளியை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இவர்களைப் போலவே விஜய் டிவி பிரபலமான குக் வித் கோமாளி புகழ் தனது மனைவி பென்சையுடன் தல தீபாவளியை கொண்டாடினார். அதனைப் போலவே நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி தம்பதியினர், சின்னத்திரை சீரியல் நடிகர் சித்து மற்றும் ஸ்ரேயா தம்பதியினர், சின்னத்திரை நடிகர் ஆன மதன் மற்றும் ரேஷ்மா தம்பதியினர் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆரியன் மற்றும் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா தம்பதியினர் என அடுத்தடுத்து பல பிரபலங்கள் தல தீபாவளியை மிகுந்த உற்சாகமாக கொண்டாடிய நிலையில் அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.