செம க்யூட் தல…. மனைவியுடன் தீபாவளி கொண்டாடிய அஜித்…. வைரலாகும் அழகிய புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர்தான் நடிகை ஷாலினி.என் அம்மு குட்டி அம்மாவின் க்யூட் குழந்தையாக அறிமுகமான இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் முதல் முதலாக ஹீரோயினியாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பிரியாத வரம் வேண்டும். பின்னர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஷாலினி சினிமாவை ஓரம் கட்டினார். தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது தாய்லாந்தில் துணிவு படப்பிடிப்பு முடித்துவிட்டு அங்கேயே பைக் ட்ரிப் சென்றுள்ளார் அஜித்.இந்நிலையில் அஜித் தற்போது தனது மனைவி ஷாலினியுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.