விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ்.அதில் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கிய நிலையில் 21 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தனர். அதில் கலந்து கொண்ட ஜிபி முத்துவிற்கு மக்கள் பேராதரவு கொடுத்து வந்தனர்.ஆனால் 14 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருந்த ஜி பி முத்து கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அதனைப் போலவே வாக்குகள் குறைவாக பெற்று நடன இயக்குனர் சாந்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது 19 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். முதல் நாட்டிலிருந்து பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகள் நாள்தோறும் நடந்து வரும் நிலையில் இனி வரும் நாட்களிலும் பல கலாட்டாக்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே வேறொரு பெண் போட்டியாளர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போகிறார் என தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சத்யா சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழைந்துள்ள நடிகை ஆயிஷா குறித்து ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

அவர் சத்யா சீரியலில் நடிக்கும் விஷ்ணுவை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அவரின் முன்னாள் காதலரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அவரின் பெயர் என்ன அவர் யார் என்பது குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
