கடற்கரையோரம் அந்த உடையில்…. ரசிகர்களை சொக்க வைக்கும் “சொப்பன சுந்தரி” மனிஷா…. வைரலாகும் செம ஹாட் க்ளிக்ஸ்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மனிஷா யாதவ்.பெங்களூரை சேர்ந்த இவர் மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ராஜு தயாரித்த டுனேகா டுனேகா என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு மீண்டும் தமிழில் ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்தில் நடித்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.அந்தத் திரைப்படத்தில் மிகவும் அழுத்தமான வேடத்தில் அசத்தலான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார்.

பின்னர் இவருக்கு கோலிவுட்டியில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அடுத்ததாக ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் கிளாமர் ஹீரோயினியாக அவதாரம் எடுத்த மனிஷா சென்னை 28 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி என்ற பாடலில் ஐட்டம் டான்ஸ் ஆடி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அப்போதிலிருந்தே ரசிகர்கள் இவரை சொப்பன சுந்தரி என்று செல்லமாக அழைக்க தொடங்கினர்.

இதனிடையே இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் மனிஷா ஜாலியாக இத்தாலிக்கு சுற்றுலா சென்று உள்ள நிலையில் அங்கு கடற்கரையில் எடுத்த பிகினி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.