தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சங்கீதா.இவர் நடிகர் நெப்போலியன் நடித்த பகவத்சிங் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே பல மலையாள திரைப்படங்களில் நடித்தவர்.இவர் இறுதியாக கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நெருப்புடா என்ற திரைப்படத்தில் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்னத்திரை பக்கம் திரும்பினார். இறுதியாக கலர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனிடையே இவர் பாடகர் கிரீஸ்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இருவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி மூன்று வருடங்கள் கழித்து இவர்களுக்கு ஷிவியா என்ற பெண் குழந்தை பிறந்தது. இதனிடையே பல திரைப்படங்களில் மட்டும் அவ்வபோது தலைக்காட்டி வந்த சங்கீதா தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சங்கீதாவின் 44வது பிறந்தநாள் அக்டோபர் 21ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு குடி, கும்மாளம் மற்றும் ஆட்டம் பாட்டம் என ஜமாய்த்து உள்ளனர்.அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
