சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா.

அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர். மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அப்போது சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆலியா மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

அதாவது இவர் விஜய் டிவியிலும் சஞ்சு சன் டிவியில் சீரியல்களில் நடித்து வந்தனர்.இதனிடையே மீண்டும் ஆல்யா மானசா கர்ப்பமானதால் சீரியலில் இருந்து சற்று விலகினார். சமீபத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே இந்த நட்சத்திர தம்பதிகள் அவ்வப்போது தங்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

தற்போது சஞ்சீவ் கலா மாஸ்டர் நடத்தி வரும் சிறப்பு பேட்டியில் பேசியுள்ளார். இவர்கள் இருவரையும் கலைத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தவர் கலா மாஸ்டர் தான்.அவரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த தம்பதிகள் தங்களின் முந்தைய கால வாழ்க்கை குறித்து கண்ணீருடன் பேசியது ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.

அந்த நிகழ்ச்சியில் சஞ்சீவ்,பெட்ரோல் போட கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும் அந்த சமயத்தில் வாங்கிய காரை கூட விற்று விட்டதாகவும் கண்ணீர் மல்க கூறினார். அதன் பிறகு தான் ராஜா ராணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து லைஃப் அப்படியே மாறிவிட்டது. என்னுடைய வாழ்வில் ஆலியா வந்த பிறகு இருவரும் கார், வீடு மற்றும் பங்களா என செட்டி லாக்கி விட்டோம் என கண்ணீர் மல்க சஞ்சீவ் கூறினார். அவர் அடித்த இந்த பேட்டி ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.