ஜில்லுனு ஒரு காதல் பூமிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா?….. முதன்முறையாக வெளியான அழகிய குடும்ப புகைப்படம்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை பூமிகா. இவர் தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். விஜய் நடித்த பத்ரி மற்றும் ரோஜா கூட்டம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். டெல்லியை சேர்ந்த இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார்.

இவர் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான யுவகுடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அடுத்து தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.சூர்யாவுடன் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் அதிக அளவு கிடைக்காத நிலையில் மற்ற மொழி திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீதாராமம் திரைப்படத்தில் இவர் இடம் பெற்றுள்ளார் . தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் பூமிகா 2007 ஆம் ஆண்டு தனது யோகா பயிற்சியாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2014 ஆம் ஆண்டு யாஸ் என்ற மகன் பிறந்தார். தற்போது மகனுக்கு எட்டு வயதாகும் நிலையில் பூமிக்கார் தனது குடும்ப புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பூமிக்காவுக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியத்துடன் கமாண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.