பிக்பாஸ் வீட்டில் கலவரம்…. மாறி மாறி மோதிக் கொள்ளும் போட்டியாளர்கள்…. அசீம் செய்த செயலால் வெடித்த பிரச்சனை…!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ்.அதில் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கிய நிலையில் 21 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தனர். அதில் கலந்து கொண்ட ஜிபி முத்துவிற்கு மக்கள் பேராதரவு கொடுத்து வந்தனர்.ஆனால் 14 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருந்த ஜி பி முத்து கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அதனைப் போலவே வாக்குகள் குறைவாக பெற்று நடன இயக்குனர் சாந்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது 19 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். முதல் நாளிலிருந்து பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகள் நாள்தோறும் நடந்து வரும் நிலையில் இனி வரும் நாட்களிலும் பல கலாட்டாக்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.இந்நிலையில் பிக் பாஸில் அசிம் எப்போதும் கொஞ்சம் முன்கோபமாக இருந்து வருகிறார்.இதனைப் பார்த்த பலரும் ஏன் இவர் இப்படி இருக்கிறார் என திட்டி வருகிறார்கள். அனைவரிடமும் கோபப்பட்டு நடந்து கொள்வது, திமிரியாக பேசுவது என பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.ஒரு சின்ன பிரச்சனையைக் கூட பேசி பேசி பெரிய மோதலாக மாற்றி வருகிறார்.

நேற்றைய எபிசோடில் தனலட்சுமி மற்றும் அசீம் இடையே பிரச்சனை வந்த நிலையில் அது இன்றும் தொடர்கிறது. அவர் தனலட்சுமி வேகமாக நெஞ்சில் கை வைத்து தள்ளுவது இன்றைய முதல் ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என விக்ரமன் மற்றும் அமுதவாணன் ஆகியோர் அசீம் உடன் சண்டை போட்டு வருகிறார்கள். அவர்களிடையே நடந்த மோசமான சண்டை தற்போது மூன்றாவது ப்ரோமோவில் பெரிதாகியுள்ளது.