பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தான் பாவனி மற்றும் அமீர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் இன் மூலம் அறிமுகமானவர் பாவனி. பின்பு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் வைல் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே வந்தவர் அமீர். அதன் பிறகு அவர் பாவனியிடம் நெருக்கமாக பழகியதால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று பலரும் கூறி வந்தனர். பிக் பாஸ் முடிந்த பிறகும் கூட இருவரும் வெளியிடங்களில் ஒன்றாக தான் சுற்றி வருகிறார்கள்.

அண்மையில் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு அசத்தினர்.அதில் பல்வேறு வேடங்களை அணிந்து நடனமாடி வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் காதல் ப்ரபோஸ் செய்வது மற்றும் அதையும் தாண்டி திருமணம் செய்து கொள்வது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.விஜய் டிவியில் தற்போது காதல் புறாக்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் அவர்கள் அஜித்தின் துணிவு படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்த போது அவர்கள் அஜித்துடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. அவர்கள் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அமீர் மற்றும் பாவனி இருவரும் ஜோடியாக வெளிநாட்டிற்கு ஒரு ட்ரிப் சென்றுள்ளனர். துபாய் செல்லும் விமானத்தில் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
