ஓவர் பர்ஃபார்மன்ஸ் செய்த செரீனா…. அலேக்காக தூக்கிச் சென்ற அசீம்…. ஒரே வார்த்தையில் சொளியை முடித்த பிக்பாஸ்….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ்.அதில் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கிய நிலையில் 21 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தனர். அதில் கலந்து கொண்ட ஜிபி முத்துவிற்கு மக்கள் பேராதரவு கொடுத்து வந்தனர்.ஆனால் 14 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருந்த ஜி பி முத்து கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அதனைப் போலவே வாக்குகள் குறைவாக பெற்று நடன இயக்குனர் சாந்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது 19 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். முதல் நாளிலிருந்து பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகள் நாள்தோறும் நடந்து வரும் நிலையில் இனி வரும் நாட்களிலும் பல கலாட்டாக்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பிக் பாஸ் வீட்டில் அவ்வபோது அசல் கோளாறு செய்யும் காதல் லீலைகள் நிகழ்ச்சியை சூடு பிடிக்க வைத்துள்ளது.அவ்வகையில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களுக்குள் புகைந்து கொண்டிருக்கும் பிரச்சனையில் எண்ணெய் ஊற்றி தீ மூட்டுவது போல கொடுக்கப்பட்டிருக்கும் டாஸ்க் ஒன்று விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

அதாவது நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் பல பிரச்சனைகள் பிக் பாஸ் வீட்டில் உருவான நிலையில் தற்போது செரீனாவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.மூச்சு திணறல் காரணமாக டால் ஹவுஸ் உள்ளேயே அவர் மூச்சு திணறி கீழே விழுது அழுது கொண்டிருந்தார். அவரை உடனே அலேக்காக அசிம் வீட்டிற்குள் தூக்கிச் சென்ற நிலையில் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் முதலுதவி கொடுத்தனர்.

உடனே விக்ரமன் உடல்நிலை முடியாதவர்கள் ஏன் இந்த போட்டியில் பங்கேற்க வேண்டும் என கூறியதற்கு மற்ற போட்டியாளர்கள் அவரை சண்டை போடும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி உள்ளது. மேலும் உடல்நிலை சரியாகி பிறகு செரினாவிடம் பேசும் பிக்பாஸ் உங்களால் இந்த போட்டியை ஈடுகொடுத்து விளையாட முடியாததால் இந்த போட்டியில் இருந்து அவர் விளக்கப்படுவதாக கூறிவிட்டார்.

இருந்தாலும் செரினாவின் மூச்சுத் திணறலை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவர் பயங்கரமாக பர்பாமென்ஸ் செய்கிறார் என கூறி வருகின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.