36 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை அதிதி ராவ்…. இணையத்தை அதிர வைக்கும் கிளாமர் போட்டோஸ்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அதிதி ராவ். கடந்த 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்த இவர் டெல்லியில் தான் வளர்ந்தார். இவருக்கு இரண்டு வயது இருக்கும்போதே பெற்றோர்கள் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதனால் தனது தாயுடன் டெல்லியில் வசித்து வந்த அதிதி ராவ் தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் துறையில் நுழைந்தார்.

அதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 26 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரஜாபதி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமாகி தனது திரை பயணத்தை தொடங்கினார்.அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் சிருங்காரம் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற இவர் அபிஷேக் பச்சன், ரன்பீர் கபீர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தினார். அதன் பிறகு பத்து வருட இடைவேளைக்கு பிறகு மணிரத்தினம் இயக்கிய காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த இவர் அந்த திரைப்படத்தில் கார்த்திக்குக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

பின்னர் மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் சைக்கோ, துல்கர் சல்மான் உடன் இணைந்து ஹே சினாமிகா என்ற படங்களில் தொடர்ந்து நடித்தார். தற்போது இவர் காந்தி டாக்ஸ் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்து வருகின்றார்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அதிதீரா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அதே சமயம் இவர் சித்தார்த்தை காதலித்து வருவதாக செய்திகள் அவ்வப்போது இணையத்தில் உலா வரும் நிலையில் நேற்று தனது பிறந்த நாளை சென்னையில் சித்தார்த்துடன் கொண்டாடி உள்ளார் அதிதி. தனது 36 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் அதிதிக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.