தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சித்தார்.இவர் அவ்வப்போது இணையத்தில் பல சர்ச்சை பேச்சுகளிலும் சிக்கியுள்ளார்.இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தா மற்றும் சித்தார் திருவருள் காதலித்து வந்ததாகவும் திருமணம் வரை சென்ற இவர்களின் காதல் சில காரணங்களால் பிரிந்ததாகவும் தகவல் வெளியானது.

தற்போது நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் காதலித்து வருவதாக அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் அவர்கள் குறித்த புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனிடையே சினிமாவில் பாய்ஸ், ஆயுத எழுத்து மற்றும் காவியத்தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சித்தார்த் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சித்தார்த் கடந்த 2003 ஆம் ஆண்டு மேக்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ஆனால் சில வருடங்கள் மட்டுமே நீடித்த இவர்களின் திருமண வாழ்க்கை 2007 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.இதனிடையே அதிதி ராவ் மற்றும் சித்தார்த் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இது குறித்த எந்த ஒரு தகவலையும் இவர்கள் இருவரும் வெளிப்படையாக கூறவில்லை .

இந்நிலையில் நேற்று அதிதி ராவ் தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடினார்.அதனை முன்னிட்டு திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் அதிதிராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த சித்தார்த்த தனது இதயராணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இந்த பதிவு மூலமாக இவர்களின் உறவு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி அந்த பதிவை தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.