இந்திய சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரம்பா. தெலுங்கில் வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். அதனைப் போலவே தமிழ் சினிமாவில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இவர் விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இலங்கைத் தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகினார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது குடும்ப புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

இவரின் கணவர் இந்திரகுமார் கனடாவை சேர்ந்தவர் என்றாலும் தற்போது சென்னையில் கிச்சன் உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் ரம்பா தனது பெற்றோருடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
