தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்.இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.வம்சி இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் தாஸ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ்,யோகி பாபு மற்றும் சரத்குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறது. திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் படத்தின் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் லீக் ஆகி அதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில் வாரிசு படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே தனது ரசிகரின் உழைப்புக்கு மரியாதை கொடுத்த விஜய்யை நினைத்து ரசிகர்கள் சிலிர்த்து போய் உள்ளனர்.நடிகர் விஜய் தனது twitter கணக்கின் முகப்பு படமாக தனது ரசிகர் உருவாக்கிய டிஜிட்டல் ஆர்ட் படத்தை வைத்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் தனது ட்விட்டர் கணக்கின் முகப்பு படமாக அவரது ரசிகர் உருவாக்கிய டிஜிட்டல் ஆர்ட் படத்தை வைத்துள்ளார்.அதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்த நிலையில் விஜயின் இந்த செயல் அவர் தங்கள் மீது வைத்துள்ள அன்பை வெளிக்காட்டுவதாக கூறி ரசிகர்கள் நெகிழ்ந்து வருகிறார்கள்.
This Day i can't forget in my life ! ????????❤❤❤
anna setted my Art as DP @actorvijay ????❤
.#ThalapathyVijay???? pic.twitter.com/iXznX0W4F1— Kajendra Krs (@kajendrakrs) October 28, 2022