“மஞ்சக்காட்டு மைனா”…. மஞ்சள் சேலையில் ரசிகர்களை சொக்க வைக்கும் நடிகை அதுல்யா ரவி…. இணையத்தை கலக்கும் நியூ கிளிக்ஸ்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை அதுல்யா ரவி.இவர் தமிழில் வெளிவந்த காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அப்ப படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான கடாவார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமும் உள்ளது.இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வாறு சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனென்றால் அவர் முகம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போல அப்படியே மாறி இருந்தது. ஆனால் உடற்பயிற்சி காரணமாகத்தான் முகம் மாறிவிட்டதாக அவர் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் மஞ்சள் நிற சேலையில் அவர் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.