ஒரே நேரத்தில் கர்ப்பமான 2 பிரபல தமிழ் நடிகைகள்…. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்…. வைரலாகும் பதிவு….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் நடிகை பார்வதி திருவோத் மற்றும் நித்தியா மேனன். அதில் நடிகை பார்வதி 2008 ஆம் ஆண்டு வெளியான பூ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதேசமயம் தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் திரைப்படத்திலும் நடித்து அசத்தினார்.

அந்த திரைப்படத்திற்காக தமிழில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. மறுபுற நடிகை நித்யா மேனன் 2011 ஆம் ஆண்டு வெளியான 180 என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்து இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.இந்நிலையில் நித்தியாமேனன் மற்றும் பார்வதி இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்தரிப்பு சோதனை செய்யும் கருவியுடன் குழந்தைக்கான நிப்பிள் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் ரசிகர்கள் பலரும் இது பட விளம்பரம் என்று கூறுகின்றனர்.