தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் ரகுராம். இவர் முதன் முதலில் கடந்த 2017 ஆம் ஆண்டு விதார்த் நடிப்பில் வெளியான ஒரு கிடாயின் கருணை மனு என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு ரகுராமின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பெரிய பங்கு வகித்தது.

அதனை தொடர்ந்து பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் ஏராளமான ஆல்பம் பாடல்களுக்கு ரகுராம் இசையமைத்துள்ளார். இதனிடையே பள்ளி பருவத்திலிருந்து அரிய வகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அதாவது மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்திய அரியவகை நோயான amyotrophic lateral sclerosis என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பல வருடங்களாக இவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.குறிப்பாக ஒரு மாத மருத்துவ செலவு மட்டும் கிட்டத்தட்ட 10 லட்சம் செலவழித்துள்ளார்.மாதத்திற்கு 10 லட்சம் ரூபாய் வீதம் செலவழித்து சிகிச்சை பெற்று வந்த ரகுராம் நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு சிறையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.