முதல் முதலாய் அந்த கறியை ருசித்து ரசித்து சாப்பிட்ட நீயா நானா கோபிநாத்…. அதுவும் எங்கு தெரியுமா?…. வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் புதிய புதிய தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. பல வருடங்களாக வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி. அதற்கு மிகப்பெரிய காரணம் என்னவென்றால் நீயா நானா நிகழ்ச்சியின் ஆங்கர் கோட் கோபிநாத் என்று சொல்லலாம். மொத்த நிகழ்ச்சியையும் தனது கட்டுக்குள் வைத்து பிரமிக்க வைக்கும் வகையில் நடத்துவார்.

நிகழ்ச்சியில் விவாதங்கள் அனைத்தையும் முடித்த பிறகு தனக்கு உரிய பாணியில் பைனல் டச் கொடுப்பார். இதனிடையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நல்லதா நாலு விஷயம் பேசுவோம் என சொல்லி அவர் மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.அதே சமயம் அவரின் பர்சனல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அவ்வகையில் தற்போது அவர் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு முதலைக்கரியை வறுத்து விற்கும் கடையில் முதலைக் கறி வாங்கி சாப்பிட்டுள்ளார். முதலை உடலில் கறியை எடுத்துவிட்டு எலும்புக்கூடு மட்டும் அந்த கடை முன்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை கோபிநாத் பகிர்ந்து முதன்முதலாய் முதலைக்கறி என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Gobinath இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@gobinathsocial)

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.