பிக்பாஸ் வீட்டுக்குள் மாஸாக நுழைந்த பிரபல நடிகை… வந்துவுடனே அவர் ஷாக்சியிடம் கேட்ட கேள்வியின் புரமோ

பிக்பாஸில் இந்த வாரம் ரேஷ்மா மற்றும் சரவணன் இரண்டு பேர் எலிமினேட் ஆனதால், கண்டிப்பாக இந்த வாரம் வைல்ட் கார்ட்டில் கஸ்தூரி களமிறங்குவார் என்று ஏற்கனவே நமக்கு தகவல் கிடைத்திருந்தது. அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரமோவில் கஸ்தூரி மாஸாக எண்ட்ரி கொடுத்துள்ளார். அதில், போட்டியாளர்களுக்கு சர்பிரைஸ் கிப்ட்டாக பெரிய பெட்டி ஒன்று உள்ளது, அந்த பெட்டியை கண்டவுடன், போட்டியாளர்கள் திறந்து பார்த்த போது, அதன் உள்ளே கஸ்தூரி இருக்கிறார். இவரைக் கண்டவுடன் கட்டியணைத்து அபிராமி வாழ்த்து சொன்ன போது.

கஸ்தூரி ஷாக்சியிடம் சென்று உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று கூறுகிறார். இதனால் இனி வரும் வாரங்களில் கஸ்தூரியின் ஆட்டத்தை பார்க்கலாம் என்றே கூறலாம். வைரலாகும் வீடியோ