சினிமா துறையில் சிறந்த பத்திரிக்கையாளர், சினிமா விமர்சகர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வந்தவர் விஜே கௌஷிக். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. கலாட்டா என்ற தனியார் இணையதளத்தில் விஜேவாக இவர் பணியாற்றி வந்தார்.

எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது பல்வேறு பதிவுகளை வெளியிடுவார். சினிமா துறையில் மிகவும் பிரபலமான பத்திரிக்கையாளர். இவருக்கு வயது 35. இந்நிலையில் இவர் நேற்று மதியம் 12 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவர் உயிரிழந்த சம்பவம் பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்புதான் அவர் சீதாராமன் படம் மற்றும் பிரபாஸ் நடித்துள்ள சலார் படத்தின் அப்டேட் குறித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
Extremely shocked… too soon…lost for words…
R.I.P. brother @LMKMovieManiac
My heartfelt condolences to the family. pic.twitter.com/GQysk5gqCM— Gautham Karthik (@Gautham_Karthik) August 15, 2022
அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த செய்தி அறிந்து திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து விட்டரின் பதிவிட்டு வருகின்றனர்.