பொதுவாக தொகுப்பாளினிகள் என்றாலே குரல் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் சற்று வித்தியாசமான குரலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக கலக்கியவர் ஜாக்குலின். முதலில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக களமிறங்கினார்.

இவர் கனா காணும் காலங்கள், தேன்மொழி பி ஏ மற்றும் ஆண்டாள் அழகர் போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருப்பார்.

இந்நிலையில் தேன்மொழி சீரியலை முடித்த பிறகு விஜய் டிவி பக்கமே அவரை காணவில்லை. அதற்கு மாறாக வேறொரு விஷயத்தில் அவர் கவனம் செலுத்தி வருகிறாராம். அது என்னவென்றால் அவர் கடுமையான உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது அவர் பார்க்க உடல் எடையை குறைத்து அழகாக உள்ளார். அந்தப் புகைப்படங்களை அவர் அவ்வப்போது இன்ஸ்ட்டாவில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் உடற்பயிற்சி செய்யும் போது வாந்தி மற்றும் மயக்கம் வந்தாலும் தன்னை உடற்பயிற்சி செய்ய சொல்லி கொடுமைப்படுத்துவதாகவும், கேட்டா எல்லாம் நார்மல் தான் என்று சொல்றாங்க. என்னால மூன்று நாளா எழுந்திருக்க முடியல என்று ஜாக்குலின் ஜாலியாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram