இந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் அமிதாபச்சன். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவர் முதல் முதலாக 1970களில் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவரின் நடிப்பு திறமைக்கு தேசிய விருது மற்றும் பிலிம்பேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

நடிகராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகர்,இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞர் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிகை ஜெப பாதுரியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஸ்வேதா நந்தா மற்றும் அபிஷேக் பச்சன் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கின்றன.

அவருடைய மகன் அபிஷேக் பச்சனும் சினிமாவில் கலக்கி வருகிறார். இதனிடையே அமிதாப்பச்சன் மும்பையில் பல்வேறு சொந்த வீடுகளை வைத்துள்ள நிலையில் அதனை வாடகைக்கு விட்டு அதன் மூலம் சம்பாதித்து வருகிறார்.

இந்த நிலையில் அமிதாப்பச்சன் ரசிகர் ஒருவர் அமிதாப்பச்சனின் சிலையை தன்னுடைய வீட்டின் முன்பு வைத்திருக்கும் சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. அமிதாப்பச்சனின் தீவிர ரசிகரான அவர் தனது வீட்டின் முன்பு அமிதாப்பச்சன் சிலையை வைத்திருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

கோபி சேட் என்ற குஜராத்தை சேர்ந்த நபர், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அமிதாப்பச்சனின் தீவிர ரசிகர் ஆன இவர் ராஜஸ்தானிலிருந்து அவரின் உருவ சிலையை வடிவமைத்து தனது வீட்டின் முன்பு வைத்துள்ளார்.அதிலும் குறிப்பாக அந்த சிலை சுமார் 60 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.