உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார்.
![]()
இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.

அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் தற்போது ஸ்ரீதர் பிரசாந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இந்தத் திரைப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

இதில் முதல் பாகம் பொன்னியின் செல்வன் 1 வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல் அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அதில் பொன்னி நதி என்கின்ற முதல் சிங்கிள் பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் ஆறாம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் கேரக்டரில் அதாவது பொன்னியின் செல்வன் என்ற ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஜெயம் ரவிக்கு மற்ற நடிகர்களை விட அதிக சம்பளம் கொடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. அப்படத்தில் சீனியர் நடிகர்களான விக்ரம்,ஐஸ்வர்யா ராய் மற்றும் கார்த்தியை விட ஜெயம் ரவிக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இருந்தாலும் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே ஜெயம் ரவி நடித்துள்ள நிலையில் அவருக்கு அதிக சம்பளம் என்பதை பலரும் நம்ப மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனிடையே இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் ஜெயம் ரவிக்கு மற்ற நடிகர்களை விட அதிக சம்பளம் கொடுப்பதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.