பிரபல நடிகைக்கு கோவில் கட்டிய தமிழக ரசிகர்…. ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் பாயாசம்…. நெகிழ்ச்சியுடன் தெரிவித்த நடிகை….!!!!

தமிழக ரசிகர் ஒருவர் தனக்கு கோயில் கட்டி இருப்பதாக நடிகை ஹனி ரோஸ் தெரிவித்துள்ளார்.தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி மற்றும் மல்லுக்கட்டு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஹனிரோஸ்.

மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டி உள்ளனர். அந்த தகவலை நடிகை ஹணிரோசே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி அளித்து பேசிய அவர்,மலையாளத்தில் நான் நடித்த முதல் படமான பாய்பிரண்ட் என்ற படத்தில் இருந்து ரசிகர்கள் பலரும் என்னை பாராட்டி வருகிறார்கள்.

 

தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது எனக்கு என்னுடைய ரசிகர் ஒருவர் கோவில் கட்டி அசத்தியுள்ளார். என்னுடைய பிறந்தநாளில் அங்கு பாயாசம் வழங்குகின்றனர் என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த ஊரில் கோவில் கட்டி உள்ளனர் என்ற விவரத்தை அவர் முழுமையாக தெரிவிக்கவில்லை.