தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நித்தியா மேனன். நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இவர் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியுள்ளார். இந்நிலையில் நடிகை நித்யா மேனன் தயாரிப்பாளர்களை அவமதிப்பதாகவும் கதைகளில் தலையிட்டு மாற்றம் செய்யும்படி இயக்குனர்களை வற்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து பேசிய நித்தியா மேனன்,என்னிடம் 200 பேர் கதை சொன்னால் 4 அல்லது 5 கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறேன். வழக்கமான படங்களில் நடிப்பது இல்லை. எனக்குத் தெரிந்த விஷயங்களை நான் தெரிவிப்பேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நித்தியா மேனன் அடுத்து டைரக்டராக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு பதில் அளித்த நித்தியா மேனன், எனக்கு டைரக்டராக வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. அது கட்டாயம் ஒரு நாள் நடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.