சினிமாவை பொறுத்த வரையில் ஒரு சில படங்களில் அறிமுகமாகி பின்னர் அடையாளமே தெரியாமல் எத்தனையோ துணை நடிகர்கள் காணாமல் போவது வழக்கம் தான். அதன்படி விஜய் அஜித் படங்களில் நடித்த இவரை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது விஜய் நடித்த குஷி திரைப்படத்தில் விஜயின் நண்பராக நடித்தவர் நடிகர் Manish Borundia. ஒரு காட்சியில் ஜோதிகா கல்லூரியில் விஜயை தேடிக் கொண்டிருப்பார். அப்போது ஜோதிகாவிடம் விஜய் போன் பூத்தில் பேசிக் கொண்டு இருப்பதை கவனிக்கவில்லையா என்று இவர் தான் கூறுவார்.

இந்தப் படத்திற்கு முன்பாகவே அஜித்தின் அமர்க்களம் படத்தில் இவர் நடித்துள்ளார். அந்தத் திரைப்படம் தான் இவருக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இது குறித்து பேசிய அவர், நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். நான் என்னுடைய தந்தையின் தொழிலை கவனித்துக் கொண்டு மறுபக்கம் மாடலிங் செய்ய தொடங்கினேன். எங்கள் குடும்பத்திற்கு அஜித் சாரை நன்றாகவே தெரியும். நான் அடிக்கடி அவரை படபிடிப்புக்கு சென்று பார்த்து வருவேன். அமர்க்களத்தில் நடிக்க வேண்டிய நடிகர் ஒருநாள் வரவில்லை.

அப்போது அந்த வேடத்தில் நடிக்க சொல்லி அஜித் சார் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். எனக்கு இப்படித்தான் சினிமா வாய்ப்பு தொடங்கியது என்று கூறியுள்ளார். மேலும் குஷி திரைப்படத்திற்கு பின்னர் இவர் பார்த்தேன் ரசித்தேன், மின்னலே, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் இரண்டு திரைப்படங்களில் ஹீரோவாகவும் இவர் நடித்துள்ளார்.

பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் சொன்னால்தான் காதலா என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் படம் கைவிட்டதை எண்ணி இவர் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த ஒரு படத்தில் மட்டும் இவர் நடித்திருந்தால் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்திருப்பார். தனக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பை தவற விட்டதால் தனது வாழ்க்கையே மாறிவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.