சிவப்பு நிற உடையில் ரசிகர்களைக் கவரும் ராஷ்மிகா மந்தனா….. வைரலாகும் புகைப்படம்….!!!!

ராஷ்மிகா மந்தனா கடந்த 2016 ஆம் ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். தெலுங்கு சினிமாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.  அதைத்தொடர்ந்து டியர் காம்ரேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ராஷ்மிகாவிற்கு ‘புஷ்பா’ படம் மேலும் பிரபலத்தை பெற்று தந்தது.

‘மிஷன் மஜ்னு’ படம் மூலம் பாலிவுட்டிலிலும் எண்ட்ரி கொடுத்துள்ள அவர், தற்போது தளபதி விஜயின் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். மேலும்  பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகி வரும் ‘குட் பாய்’, ரன்பீர் கபூருடன் ‘அனிமல்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேஷனல் கிரஷ் நடிகை ராஸ்மிகா மந்தனா  மும்பையில் நடந்த ஒரு சினிமா விருது நிகழ்ச்சியில் சிவப்பு நிறத்தில் உடை அணிந்து சென்று அனைவரையும் கவர்ந்தார். அப்போது எடுக்கப்பட்ட ராஷ்மிகாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.