தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் நிதின் சத்யா. இவர் 2003 ஆம் ஆண்டு திரைத்துறைக்கு அறிமுகமானார். 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன்,பிரபு மற்றும் சினேகா நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்தார்.

அதன் பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 என்ற திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே வருடத்தில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. இவர் தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வரும் நிலையில் நூலிலையில் விபத்தில் இருந்து உயிர் தப்பியதாக கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று இரவு மிக அதிக கன மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி இருந்துள்ளது. மிகக்குறைந்த நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து மெர்சல் ஏற்பட்டது. அங்கு நடிகர் நிதின் சத்யாவும் சிக்கிக் கொண்டு உள்ளார். அப்போது சென்னை samco RKFI junction இல்இருந்தபோது திடீரென மரம் சாய்ந்து விழுந்து உள்ளது.
Chennai city jammed with heavy rains!!! Just missed a tree fall close to kauvery,Samco RKFI junction. Stay safe people!!! @ChennaiRains
— Nitinsathyaa (@Nitinsathyaa) August 21, 2022
அப்போது நடிகர் நிதின் சத்யா நூலிலையில் உயிர் தப்பியுள்ளார். இது தொடர்பான தகவலை அவர் ட்விட்டர் பதிவில் பகிர்ந்து உள்ளார். அதில் மழை நேரத்தில் மரத்தின் அடியில் நிற்பதை மிகவும் ஆபத்தானது என்று மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.