அடடே…. நடிகை ஸ்ரீவித்யாவின் தங்கை பிரபல சீரியல் நடிகையா?…. அதுவும் இந்த சீரியலா?…. இத்தனை நாள் இது தெரியாம போச்சே….!!!!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீவித்யா. கர்நாடக இசை பாடகி எம்எல் வசந்தகுமாரி மற்றும் கிருஷ்ணமூர்த்தியின் மகளான இவர் இயக்குனர் ஏபி நாகராஜன் இயக்கிய திருவருள் செல்வர் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். 1966 ஆம் ஆண்டிலிருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவர் 2000 ஆண்டு வரை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் கொடி கட்டி பறந்தவர்.

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிவாஜி ஆகியோருடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதரிடையே ஸ்ரீவித்யா ஜார்ஜ் தாமஸ் என்பவரை காதலித்து வந்த நிலையில் இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறி 1976 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே கணவர் சில விஷயங்களில் தன்னை ஏமாற்றியதால் 1980 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகு சினிமாவில் பிஸியாக நடித்து வந்த ஸ்ரீவித்யா புற்றுநோய் காரணமாக தனது 53வது வயதில் 2006 ஆம் ஆண்டு காலமானார். இந்நிலையில் அவரின் தங்கை குறித்த ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது தமிழ் சினிமாவில் பலம் வரும் சின்னத்திரையில் அம்மாவாக மட்டுமல்லாமல் பிரபலமான ராஜா ராணி சீரியலில் மாமியாராக கலக்கி வருபவர் தான் நடிகை ஸ்ரீவித்யாவின் தங்கை. ராஜா ராணி சீரியலில் மாமியார் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவகாமி தான் ஸ்ரீவித்யாவின் தங்கை. இவரின் இயற்பெயர் பிரவீனா. இவர் தனது 18 வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகின்றார். 50க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது .