தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்து திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன்,கே எஸ் ரவிக்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் சூட்டிங் பெரிய ஜெயில் செட்ட உடன் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்த திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரஜினியின் அன்சீன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வருவது வழக்கம்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அதனை ரசிகர்களும் இணையத்தில் வைரலாகி வருவார்கள். அவ்வகையில் கடந்த 1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் கூல்ட்ரிங்ஸ் விளம்பரம் ஒன்றில் நடித்தது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அப்போது அவர் எவ்வளவு ஸ்டைலாக விளம்பரத்தில் நடித்துள்ளார் என்பதை குறிக்கும் அந்த வீடியோவை ரசிகர்கள் அதிக அளவு இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.