“மொத்த செலவும் இவங்களது தான்”…. ஒரு பைசா செலவில்லாமல் ஹனிமூன் சென்ற நயன் -விக்கி….. வாயை பிளந்த ரசிகர்கள்….!!!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு இருவரும் வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்று இருந்த நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்த நிலையில் கடந்த வாரம் இரண்டாவது ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர்.அங்கு இருவரும் ஒன்றாக எடுத்துக் கொள்ளும் ரொமான்டிக்கான புகைப்படங்களை அவ்வபோது விக்னேஷ் சிவன் இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த இரண்டாவது ஹனிமூன் செலவை netflix நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாக இணையத்தில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் தற்போது ஹனிமூன் சென்று ஜாலியாக இருக்கிறார்கள்.

ஏற்கனவே இவர்களின் திருமண செலவை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாக இணையத்தில் தகவல் வெளியான நிலையில் தற்போது இவர்களின் ஹனிமூன் செலவையும் ஒட்டுமொத்தமாக netflix நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.