பிக் பாஸ் செட்டில் அமீர் – பாவனி திருமணம்…. பட்டென உண்மையை போட்டுடைத்த பாவனி….. வைரல் ஆகும் ட்விட்டர் போஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தான் பாவனி மற்றும் அமீர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் இன் மூலம் அறிமுகமானவர் பாவனி. பின்பு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் வைல் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே வந்தவர் அமீர். அதன் பிறகு அவர் பாவனியிடம் நெருக்கமாக பழகியதால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று பலரும் கூறி வந்தனர்.

பிக் பாஸ் முடிந்த பிறகும் கூட இருவரும் வெளியிடங்களில் ஒன்றாக தான் சுற்றி வருகிறார்கள். அண்மையில் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டு நடனமாடி வருகிறார்கள். பல்வேறு வேடங்களில் அந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அசத்தி வருகின்றனர். அதன்படி அமீர் மற்றும் பாவணி இருவரும் பல்வேறு வேடங்கள் அணிந்து இதுவரை நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பாவனிக்கு அமீர் ப்ரொபோஸ் செய்வது போன்ற வீடியோக்களும் இணையத்தில் வெளியானது. இதற்கு அடுத்த கட்டமாக தனது காதலை விஜய் டிவியில் வெளிப்படுத்தியவர் செட்டிலையே திருமணத்தை நடத்தி முடித்து விட்டார் .

 

அதாவது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இவர்களின் திருமணம் நடைபெறுவது போன்ற காட்சி இடம்பெற்றது. அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகிய நிலையில் ரசிகர்கள் பலரும் எப்போது ரியல் திருமணம் என்று கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலேயே அமீரின் கால் பிரச்சனையாக இருந்த நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வுக்காக ரொம்பவே சிரமப்பட்டு மிகவும் கஷ்டமான ஸ்டெப்புகளை கோரியோகிராப் செய்து நடனமாடி வந்தார். இந்த நிகழ்ச்சியின் போது அவரின் காலில் பிரச்சனை இருந்ததாகவும் அதனையும் தாண்டி அவர் நடனமாடியதாகவும் பாவனி தற்போது ட்விட்டரில் பகிர்ந்து உள்ள செய்தி ரசிகர்களை பதற வைத்துள்ளது.

அதில், ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்றால் அமீர் ரெஸ்ட் எடுத்து இருக்கலாம்.ஆனால் அதையெல்லாம் தாண்டி எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் எழுந்து நிற்கும் உன் மனதுக்கு தான் உன்னை எல்லோரும் லவ் பண்றாங்க என்று பதிவிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து மறைமுகமாக தனது காதலை பாவனி வெளிப்படுத்தி உள்ளாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.மேலும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தையும் ஹாஸ்பிடலில் எடுத்த ரிப்போர்ட்டையும் அவர் ஷேர் செய்துள்ளார்.