தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் எச்.வினோத் இயக்கத்தில் அடுத்ததாக ஏகே 61 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இவர் நடிப்பதை தாண்டி மற்ற விஷயங்களிலும் அதிகம் ஆர்வம் கொண்டவர். அவ்வகையில் துப்பாக்கி சூடும் பயிற்சியில் கடந்த சில வருடங்களாக இவர் இருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்திருப்போம்.

இந்நிலையில் நடிகர் அஜித் திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சூடும் போட்டியில் கலந்து கொண்டார். அங்கு 47வது மாநிலத் துப்பாக்கிச் சூடு போற்றி நடைபெற்ற நிலையில், 1300 போட்டியாளர்கள் அங்கு கலந்து கொண்டனர். இதற்காக திருச்சி வந்த அஜித் ரசிகர்களை பார்த்து கையெசத்தை நன்றி தெரிவித்தார். அந்த துப்பாக்கி சூடும் போட்டியில் நடிகர் அஜித் 4 தங்கம் மற்றும் இரண்டு வெண்கலம் வென்றார்.

இந்நிலையில் திருச்சிக்கு அஜித் வந்து சென்றதை எடுத்து ரசிகர்கள் ஒட்டியுள்ள பேனர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சுபாஷ் சந்திர போஸ் உடையில் அஜித்தின் புகைப்படத்தை ரசிகர்கள் தயார் செய்து திருச்சி மாநகர முழுவதும் ஒட்டியுள்ளனர்.

திருச்சி மாநகருக்கு வருகை தந்த நிகழ்கால சுபாஷ் சந்திரபோஸ் என்று அஜித்தை குறிப்பிட்டு திருச்சி முழுவதும் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதனை பார்த்த நெட்டிசன்கள், என்னடா இது? சுபாஷ் சந்திர போஸ்க்கு வந்த சோதனை என்று விமர்சித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
