தமிழ் சினிமாவில் முன்னாடி காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாக திகழ்பவர் நடிகர் சந்தானம். எப்பொழுதும் திரைப்படங்களில் கவுண்டர் டயலாக்குகளுடன் அனைவரையும் சிரிக்க வைக்கும் சந்தானம் சில வருடங்களாக ஹீரோவாக களமிறங்கியுள்ளார். அவர் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் குலு குலு. இந்தத் திரைப்படத்தில் ஆக்சன் கிங் போல சந்தானம் களமிறங்கியுள்ளார். ஒரு பக்கம் ஹீரோவாகவும் மறுபக்கம் காமெடி நடிகராகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இந்தத் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ‘

அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் சந்தானத்தின் ஃபயர் கன் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இதுதான் இப்பொழுது ட்ரெண்டா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் திரையுலகில் பிரபல நடிகரான சந்தானம் அவர்களின் மகன் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரியில் உள்ள சித்தானந்தர் கோவிலுக்கு தனது மகனுடன் நேற்று சந்தானம் வருகை தந்தார்.அந்தக் கோவிலில் மகனுடன் நடிகர் சந்தானம் சாமி வழிபாடு செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய மகனா என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
