மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் காளிதாஸ் ஜெயராம். மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான ஜெயராமனின் மகன் தான் இவர். காளிதாஸ் ஜெயராம் தற்போது மலையாளத்தை விட தமிழில் முக்கியத்துவம் கொடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில வருடங்கள் வரை இவருக்கு மிகப்பெரிய பிரேக் எதுவும் கிடைக்காத நிலையில் கடந்த வருடம் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான தங்கம் என்கிற அந்தாலஜி படம், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்தது என தற்போது இவரது திரையுலக பயணத்தில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் சமீபத்தில் தனது காதலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். தற்போது காளிதாஸ் குடும்பத்துடன் அவரின் காதலி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் விரைவில் திருமணமா என கேட்டு வருகிறார்கள்.
