மீண்டும் ரிலீஸ் ஆகிறது ‘மவுனமாக’ கமல் நடித்த ‘பேசும் படம்’ – 36 ஆண்டுகளுக்கு முன்பே சக்கைப் போடு போட்ட இந்த படத்தின் அன்றைய வசூல், அம்மாடியோவ், இவ்வளவா?…

கமல்

நடிகர் கமல்ஹாசன் தற்போது, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், அவர் நடிக்க உள்ளார். கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘நாயகன்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படத்துக்கு பிறகு, மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிப்பதால் இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.ஷங்கர் இயக்கும் படத்தையும் இந்தியன் 2 படத்தை காணவும் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

kamal
கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான, ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில், கமல்ஹாசன் நடித்த பழைய படங்கள் சில, சமீபமாக ரி ரீலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், வேட்டையாடு விளையாடு படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு, தியேட்டர்களில் வெற்றிக்கரமாக ஓடியது. அதைத் தொடர்ந்து, இரண்டு வேடங்களில் கமல் நடித்த ‘ஆளவந்தான்’ படமும் திரைக்கு, அடுத்ததாக வர உள்ளது.

இந்த படங்களை அடுத்து, கடந்த 1987ம் ஆண்டில், அதாவது 36 ஆண்டுகளுக்கு முன் கமல் நடிப்பில் வெளிவந்த, ‘பேசும் படம்’ என்ற படமும் ரி ரீலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படம் தமிழில் மட்டுமின்றி, தெலுங்கில் ‘புஷ்பக்’ என்ற பெயரில் ரிலீஸ் ஆனது. கமல் சினிமா பயணத்தில், மிக முக்கியமான படங்களில் இந்த படமும் ஒன்றாகும்.

இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ், ‘பேசும் படம்’ படத்தின் டைரக்டர்.. 36 ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம், ரூ. 35 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால், படம் ரிலீஸ் ஆகி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலானது. இந்த படத்தின் ஸ்பெஷல், படத்தில் நடித்த யாருமே பேச மாட்டார்கள் என்பதுதான். .மீண்டும் தமிழில் ரிலீஸ் ஆகும் ‘பேசும் படம்’ வசூல், எத்தனை கோடிகளை தாண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.