
டிவி சீரியல் நடிகைகளில் மிக பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. பாக்கியலட்சுமி சீரியலில், வில்லி கேரக்டரில் நடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்தார். விஷ்ணு விஷால் நடித்த ‘வேலையின்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ என்ற படத்தில், சூரியின் மனைவியாக புஷ்பா கேரக்டரில் நடித்த வகையில், சினிமா ரசிகர்களுக்கும் இவர் மிக பரிச்சயமானவர்தான்.
துவக்கத்தில் ஏர் ஹோஸ்டல், பின் டிவி சேனல்களில் செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என இருந்து, பின் சீரியல்களில் நடிக்க வந்த ரேஷ்மா பசுபுலேட்டி, இன்று முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். பல சேனல்களில், சீரியல்களில் நடித்து வரும் இவர், சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு, ரசிகர்ளை குஷிப்படுத்துகிறார். அதுவும் இவரது புகைப்படங்கள், வீடியோ்ககள் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், செம கிளாமராக இருப்பதால், லைக்குகள் குவிகிறது. இதயங்கள் பறக்கிறது.
சமீபத்தில், கருப்பு நிற கவுன் அணிந்து, கண்களில் கண்ணாடி அணிந்தபடி இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களை பார்த்து, ரேஷ்மாவின் அழகில் சொக்கிப் போன ரசிகர்கள் பலரும், கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.
‘கவர்ச்சியில் ரேஷ்மாவை மிஞ்ச ஆளே இல்லப்பா, பார்த்தா, நாள் முழுக்க பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே,’ என்று கூறி தங்களது மனக் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.