நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி தனியார் விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இறப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரது கணவர் ஹேம்நாத் மற்றும் பெற்றோர் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதன் பிறகு சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் எழுந்த நிலையில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.பின்னர்  60 நாட்கள் சிறையில் இருந்த ஹேம்நாத் ஜாமீனில் வெளியானார். அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் அரசியல் புள்ளிகள் மற்றும் பணம் படைத்தவர்கள் என பலருக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு புகார்கள் எழுந்தன. இந்நிலையில் சித்ராவின் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த நகர்வுகள் இந்த வழக்கை புரட்டி போட்டு உள்ளன.

அதாவது இந்த வழக்கில் தனக்கு எதிராக போலீசார் தாக்கல் செய்த குற்ற பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்று ஹேம்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதி ஆதாரம் உள்ளதால் குற்றப் பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என்று கூறி ஹேம்நாத் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் விசாரணையே நீதிமன்றத்தில் மேற்கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.