தமிழ் சினிமாவில் இன்று முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடியில் நடித்ததன் மூலம் பரோட்டா சூரி என்று பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அதன் பிறகு சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இதுவரை பல்வேறு காமெடி படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் தற்போது ஹீரோவாகவும் அவதாரம் இருக்கிறார். அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அப்படத்தில் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அது ஒரு பக்கம் இருக்கிற மறுபக்கம் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோல்களில் நடித்து வருகின்றார். அண்மையில் வெளியான விருமன் திரைப்படத்திலும் இவர் காமெடியனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் நடிகர் சூரி, சூர்யா மற்றும் இயக்குனர் சங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது அந்நிகழ்ச்சியில் பேசிய சூரி, சூர்யாவின் அறக்கட்டளை குறித்து,ஆயிரம் கோவில் கட்டுவதை விட, அண்ண சத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என உணர்ச்சி வசமாக பேசினார்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஆன்மீகவாதிகள் மத்தியில் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளது. அதற்கு விளக்கம் அளித்து பேசிய சூரி, நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது. நான் எந்த வேலையை தொடங்கினாலும் மீனாட்சி அம்மனை வைத்து தான் ஆரம்பிப்பேன். நான் கடவுளுக்கு எதிரானவன் இல்லை . நான் நடத்தும் ஹோட்டலுக்கு அம்மன் என்று தான் பெயர் வைத்துள்ளேன்.

சிலர் நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள்.நான் படிக்காதவன் அதனால் கல்வியின் முக்கியத்துவம் எனக்கு தெரியும் என்பதால் நான் அவ்வாறு கூறினேன் என்று சூரி விளக்கம் அளித்தார். இந்நிலையில் சூரி தனது குடும்பத்துடன் தற்போது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இதனைப் பார்த்த பலரும் கோவில்கள் குறித்து சர்ச்சை எழுந்ததால் இவர் கோவில் கோவிலாக சென்ற சுவாமி தரிசனம் செய்கிறாரா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
