அடேங்கப்பா…. தனுஷின் கனவு இல்லம்…. எத்தனை கோடி செலவு செஞ்சிருக்காரு தெரியுமா?….. கேட்டா தலையே சுத்துது….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இறுதியாக நடித்த மாறன்,  திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு பிறகு , நானே வருவேன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கு தனுஷ் கமிட் ஆகி உள்ளார். கடந்த 20 வருடங்களாக தனது கடின உழைப்பால் ஆக சிறந்த நடிகராக உயர்ந்திருக்கும் தனுஷ் பாடகர், பாடலாசிரியர்,இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினி வீடு அமைந்திருக்கும் போயஸ் கார்டன் பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார் தனுஷ். போயஸ் கார்டனில் கிட்டத்தட்ட எட்டு கிரவுண்ட் நிலத்தில் பிரம்மாண்டமான வீடை கட்டி வருகிறார். அதற்கான பூமி பூஜை கடந்த வருடம் நடைபெற்றது. அதில் ரஜினி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தனுஷின் மிகப்பெரிய இந்த கனவு வீடு சுமார் 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த வீட்டை தனுஷ் வடிவமைத்துள்ளார். அங்கு நீச்சல் குளம், உள் விளையாட்டு அரங்கு வசதி, அனைத்து உபகரணங்களையும் கொண்ட ஜிம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஹோம் தியேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அந்த வீட்டில் உள்ளது.

அது மட்டுமல்லாமல் தனது வீட்டின் படுக்கை அறைகள், சமையலறை மற்றும் டைனிங் ரூம் என அனைத்தையும் சர்வதேச தரத்தில் தனுஷ் வடிவமைத்துள்ளார்.  தற்போது தனுஷின் கனவு இல்லம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஏராளமான பிரம்மாண்டங்கள் நிறைந்த அந்த வீட்டின் பாதி கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்து விட்டன. வீட்டில் விசாலமான கார் பார்க்கிங், குடும்பத்துடன் சேர்ந்து படம் பார்க்க பெரிய ஹோம் தியேட்டர், ஜிம் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெற்ற இந்த வீடு கிட்டத்தட்ட 150 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறதாம் .

அது மட்டுமல்லாமல் வீட்டிற்கு தேவையான ஒவ்வொரு பொருளையும் தனுஷ் தேர்வு செய்து வருகிறார். குறிப்பாக தனது முன்னாள் மாமனார் ரஜினியிடம் கோடி கணக்கில் வாங்கி வீட்டிற்கு தனுஷ் செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வீட்டின் அலங்கார பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே விரைவில் இந்த வீட்டின் கட்டுமான பணிகள் முழுவதும் நிறைவடைந்து கிரகப்பிரவேசம் விழா நடைபெற உள்ளது.