தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். அவர் தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வருகின்றன.

ஸ்ருதிஹாசன் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல் என்பவரை காதலித்தார். பின்னர் பிரேக்கப் செய்துவிட்டார். தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சாந்தனு அழைத்த பேட்டி ஒன்றில், திருமணம் பற்றி கேட்டபோது, ஒரு ஆர்டிஸ்ட் ஆக இந்த சமூகத்தில் இருக்கும் பல விஷயங்கள் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது.

நான் எப்போதும் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறேன். அதனைப் புரிந்து கொள்ளும் பார்ட்னர் கிடைத்துள்ளார். திருமணத்தைப் பற்றி பேசினாலே எனக்கும் ஸ்ருதிக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. எங்கள் உறவு கலையை அடிப்படையாகக் கொண்டது” என கூறியுள்ளார்.இவர் கூறி உள்ள இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
