அஜித்தை போல கெத்து காட்டும் நடிகர் விஜயின் அப்பா…. அப்படி என்ன வேலை செய்தார் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் அஜித். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் நடிகர் அஜித் பிஸியாக உள்ளார்.

 

இதில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் படத்தில் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே அஜித் பைக்கில் உலகம் சுற்றும் கனவை தற்போது நிறைவேற்றிக் கொண்டு வருகின்றார். அண்மையில் தாய்லாந்தில் பைக் ரைடு சென்று இருந்த புகைப்படங்கள் வைரலானது. அடுத்து எங்கு செல்ல இருக்கிறார் என்பது தெரியவில்லை.

இந்நிலையில் மற்றொரு பிரபலத்தின் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விஜயின் தந்தை சந்திரசேகர் இமாலயாவுக்கு சென்றுள்ளார் .அவர் பைக்கில் செம்ம மாஸ் ஆன லுக்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதனைப் பார்த்து ரசிகர்கள் அஜித்தை போல இவர் பைக்கில் உலகம் சுற்று இருக்கிறாரா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.