சினிமாவுக்காக அதை செய்ய சொன்ன தயாரிப்பாளர்…. பட வாய்ப்பை தூக்கி எறிந்த நடிகை அஞ்சலி நாயர்…. ஓபன் டாக்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அஞ்சலி நாயர். இவர் மலையாள சினிமாவில் இருந்து வந்து புது வரவாக நெடுநல்வாடை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கிராமத்து பெண்ணாக நடிக்க ஆரம்பித்த இவர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக டானாக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

ஓடிடியில் வெளியான இந்த படத்தில் போலீசாக நடித்திருக்கும் அஞ்சலி நாயர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதனைப் போலவே காலங்களில் அவள் வசந்தம் என்ற திரைப்படத்திலும் நடித்ததன் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பதித்தார். இதனைத் தவிர மேலும் சில படங்களிலும் இவர் நடித்து வருகிறார். குறிப்பாக விஜய் சேதுபதியுடன் ஒரு திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் ஒரு தெலுங்கு திரைப்படத்தின் வாய்ப்பிற்காக சென்றபோது தன் பெயரை மாற்றும்படி தயாரிப்பாளர் இவரிடம் கூறியுள்ளார்.தன் பெற்றோர்கள் வைத்த அந்த பெயரை தன்னால் மாற்றவே முடியாது எனக் கூறி பட வாய்ப்பு தூக்கி எரிந்துள்ளார் நடிகை அஞ்சலி நாயர்.பெற்றோர் ராணுவத்தில் இருந்ததால் சிறுவயதில் இருந்தே துணிச்சல் மிகுந்த பெண்ணாக வளர்த்து வந்த இவர் சினிமாவுக்காக தன் பெயரை மாற்ற முடியாது என வெளிப்படையாக கூறிவிட்டார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.